MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சூழல் இயக்கம் என்றாள் என்ன?
-
மூன்று சாய்தளங்களில் ஒரே மாதிரியான திண்மக் கோளங்கள் கீழ்நோக்கி இயங்குகிறது. சாய்தளங்கள் A, B, C ஆகியவை ஒத்த பரிமாணத்தை உடையன. A யில் உராய்வின்றியும், B இல் நழுவுதலற்ற உருளுதலும் மற்றும் C யில் நழுவி உருளுதலும் ஏற்படுகிறது. சாய்தளத்தின் அடிப்பகுதியில் இவற்றின் இயக்க ஆற்றல்கள் EA, EB, EC,இவற்றை ஒப்பிடுக.
-
இரட்டைக்கு ஏதேனும் மூன்று எடுத்துக்காட்டுகள் தருக
-
திண்மப் பொருள் என்றால் என்ன?
-
கோண உந்தத்தின் மதிப்பு சுழியாவதற்கான நிபந்தனைகள் யாவை?
-
ஈர்ப்பின் மையம் என்றால் என்ன?
-
திண்மப் பொருட்களின் திருப்புவிசையின் கணக்கீடுகளில் அச்சுக்கு இணையான விசையை ஏன் கருத வேண்டிய அவசியமில்லை?
-
விமானத்தில் உள்ள சூழல் விசிறிகள் பயன் என்ன?
-
ஒரு புள்ளி நிறையின் கோண உந்தத்தை வரையறு.
-
வெவ்வேறு நிகழ்வுகளை பயன்படுத்தி இன் மதிப்பினை அட்டவணைப்படுத்துக
-
சறுக்குதலுக்கும் நழுவுதலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
கீழ்கண்ட வடிவியல் அமைப்புகளின் நிறைமையத்தை காண்க.
(அ) சமபக்க முக்கோணம்
(ஆ)உருளை
(இ) சதுரம் -
திருப்புத்திறனின் தத்துவத்தை கூறுக.
-
ஒரு புள்ளி நிறை மற்றும் பருப்பொருளின் நிலைமத்திருப்புத் திறனை வரையறு.
-
28 kg நிறையும் 10 m நீளமும் கொண்ட சீரான மரத்துண்டை அருண் மற்றும் பாபு சுமந்து செல்கின்றனர். மரத்துண்டின் முனைகளிலிருந்து இவர்கள் முறையே 1 m மற்றும் 2 m தொலைவில் பிடித்துள்ளனர். இவர்களில் யார் மரத்துண்டின் எடையை அதிகம் தாங்கிச் செல்கின்றார்.
-
20 m s-1 என்ற திசை வேகத்துடன் வட்டப்பாதையில் மிதிவண்டி ஒட்டுபவர் செங்குத்து தளத்துடன் 30° கோணம் சாய்ந்த நிலையில் கடக்கிறார். வட்டப்பாதையின் ஆரம் என்ன?
( g = 10 m s-2 எனக் கொள்க). -
ஒரு காரின் நிறை 1200kg. ஆரம் 300m கொண்ட ஒரு வட்டப்பாதையை சுற்றி பயணிக்கிறது. அதன் மாறாக வேகம் 54km/h. அதன் கோண உந்தத்தை கணக்கிடுக
-
3 kg, 5 kg என்ற இரு புள்ளி நிறைகள் X அச்சில் ஆதிப்புள்ளியிலிருந்து முறையே 4 m, 8 m என்ற தொலைவில் உள்ளன. இரு புள்ளி நிறைகளின் நிறை மையத்தின் நிலைகளை, ஆதிப்புள்ளியிலிருந்து காண்க
-
இரு புள்ளி நிறைகளின் நிறை மையத்தின் நிலைகளை ஆய அச்சு அமைப்பை பொருத்து காண்க.
-
5 அலகுகள் நிறை கொண்ட ஒரு துகள் v=\(3\sqrt { 2 } \) அலகுகள் சீரான வேகத்துடன் XOY தளத்தில் y =x +4 என்ற சமன்பாட்டின் படி இயங்குகிறது. அத்துகளின் கோண உந்தத்தை காண்க.
-
சமபக்க முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் மூன்று நிறைகள் முறையே m1=1kg m2=2kg மற்றும் m3kg வைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நிறைமையத்தை காண்க.
-
சீரான மெல்லிய வட்ட வளையமானது நழுவதலின்றி சாய்தளத்தில் கீழ் நோக்கி உருள்கிறது. சாய்தளத்தின் சாய்வுக்கோணம் 45o எனில் அதன் வழியே நேர்கோட்டு முடுக்கத்தைக் கணக்கீடுக.
-
m நிறையும், l நீளமும் கொண்ட தண்டு அதன் ஒரு முனையின் வழிச்செல்லும் அச்சைப் பொருத்து θ கோணத்தை ஏற்படுத்துகிறது. அந்த அச்சைப் பற்றிய நிலைமத்திருப்புத்திறனைக் காண்க.
-
இருபுள்ளி நிறைகளின் நிறை மையம் சமன்பாட்டை பெறுக.