MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(இயக்க விதிகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயக்கம் பற்றிய கலிலியோவின் கூற்று என்ன?
-
கணத்தாக்கம் மற்றும் உந்தத் தத்துவத்தின் எ.கா மூன்றினை கூறுக.
-
100 kg நிறை உள்ள பொருள் 50 cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறதெனில், அப்பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பைக் காண்க.
-
ஒரு குரங்கு கயிற்றில் கீழே இறங்குகிறது.அக்கயிறானது தாங்கக்கூடிய பெரும இழுவிசை குரங்கின் எடைக்குச் சமமானது.கயிற்றில் குரங்கு 1,2 இறங்கத் தேவையான குறைந்த பட்ச முடுக்கம் யாது?
-
3 kg நிறையுடைய கட்டி ஒரு கிடைத்தளத்தால் ஓய்வு நிலையில் உள்ளது.கிடைத்தளத்துடனான கோணம் மெதுவாக அதிகரிக்கப்படுகிறது.உராய்வுக் கோணம் θ 450 தளத்தில் பொருளை நகர்த்தத் தேவையான மிகக் குறைந்த விசையைக் கணக்கிடுக. [g=புவியீர்ப்பு விசை].
-
இயக்கம்-விசை இதைப் பற்றி கலிலியோ ,அரிஸ்டாடில் கருத்து என்ன?
-
உராய்வற்ற சாய்தளம் ஒன்றில் சறுக்கிச் செல்லும் பொருள்கள் மீது செயல்படும் விசைகள் எவற்றைத் தீர்மானிக்கின்றன?
-
10m வளைவு ஆரம் கொண்ட வட்ட வடிவச் சாலையில் செல்லும் கார், 50 ms-1 திசைவேகத்தில் வளைகிறது அக்காரினுள்ளே அமர்ந்திருக்கும் 60 kg நிறையுடைய மனிதர் உணரும் மையவிலக்கு விசையைக் காண்க.
-
m நிறையுள்ள கனச் செவ்வகப் பொருளொன்று கிடைத்தளப் பரப்பில் உள்ளது. அப்பொருள் u என்ற ஆரம்பத் திசைவேகத்துடன் கணநேரத்திற்குத் தள்ளப்படுகிறது. பொருளுக்கும், கிடைத்தளப் பரப்பிற்கும் இடையே உள்ள இயக்க உராய்வுக்குணகம் \({ \mu }_{ k }\) எனில், கனச் செவ்வகப் பொருள் ஓய்வு நிலைக்கு வரும் காலத்தைக் காண்க.
-
ஒரு ராக்கெட்டின் நிறை 7000 kg செங்குத்தாக ஏவப்படுகிறது.ராக்கெட்டில் முடுக்கம் 30 ms-2 அதன் ஒரு வேகம் 700 m/s.ஒரு செகண்டில் வெளியேற்றப்படும் வாயுவின் அளவு யாது?
-
ஒரு கிடைத்தள விசை 3.2 kg wt 3.7 kg பிளாக்கின் மீது செலுத்தப்படுகிறது. பிளாக்கின் கிடைத்தள பரப்பின் மீது ஓய்வு நிலையில் உள்ளது. உராய்வு குணகம் 0.6 பிளாக்கில் உண்டாக்கப்படும் முடுக்கம் என்ன?
-
சன்னல் கண்ணாடியின் மேல் விழும் கல் ஒன்று கண்ணாடியைத் துண்டு துண்டாக உடைக்கிறது. ஆனால் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டு கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு செல்லும் எதனால்?
-
வெக்டர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக
-
லாமியின் தேற்றத்தைப் பயன்படுத்தி தொட்டியில் உள்ள ஒரு குழந்தை மீது செயல்படும் விசைகளைக் கூறி கணக்கிடுக.
-
புவியின் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்கு விசை மனிதர்களின் மீது தாக்கத்தை எவ்வாறு தோற்றுவிக்கிறது?
-
35 g நிறையுள்ள ஒரு கிரிக்கெட் பந்து ஸ்டெம்பைத் கோணத்தில் திசைவக்கத்துடன் தாக்குகிறது. பந்தினால் பெறப்பட்ட கணத்தாக்கு விசையைக் கணக்கிடுக.
-
ஒரு பொருளின் இயக்கத்தை தொடரச் செய்வதைவிட, முதலில் தொடங்குவது கடினம். எதனால்?
-
மையவிலக்கு விசையைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சுருக்கமாக விளக்குக.
-
சாய்தளத்தில் பொருள் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதை தனித்த பொருளின் விசைப் படத்துடன் விவரி.
-
உருளுதலின் உராய்வினைப் பற்றி சுருக்கமாக விளக்குக.
-
உந்த மாறாவிதிக்கு ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
சென்னையிலுள்ள 60 kg நிறையுடைய மனிதரின் மீது செயல்படும் மையவிலக்கு விசையைக் காண்க
(கொடுக்கப்பட்டவை: சென்னையில் குறுக்குக் கோடு θ = 13°) -
பழம் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி பழத்தைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்.
-
-
சறுக்குக் கோணத்தை கண்டறிவதற்கான சோதனையைச் சுருக்கமாக விவரி.
-
பின்வரும் தனித்தப் பொருளின் விசைப்படங்களில் எப்படம் நேர்க்குறி X அச்சுத்திசையில் முடுக்கமடையும் துகளின் இயக்கத்தைக் குறிக்கிறது?
-